வதந்திகள் சூடு பிடித்த நிலையில் கட்சிகள் மௌனம் ; தவெக ஆட்சிக்கு வழி திறக்குமா தற்போதைய நிலை?
தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்த வதந்திகள் சமீப நாட்களில் பரவி வருகின்றன.
இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் இது குறித்து பரவலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
திமுக–அதிமுக கூட்டணி வதந்தி
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அதிமுக அணிக்கு 53 உறுப்பினர்களும், காங்கிரஸை தவிர்த்து திமுக கூட்டணிக்கு சுமார் 68 உறுப்பினர்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் இணைந்தால், 121 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பெறலாம் என்ற கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் பாமக (PMK) போன்ற கட்சிகள் ஒன்றாகச் சேர்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இக்கட்சிகளுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக, ஒரே கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தேவையான எண் பெரும்பான்மையைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கும் வாய்ப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவை உறுதியாகும் பட்சத்தில், தவெக தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆனால், இவ்வாறான அனைத்து கணிப்புகளும் அரசியல் வட்டாரங்களில் நிலவும் விவாதங்களின் அடிப்படையில் உருவானவை மட்டுமே என்பதும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை தெளிவான நிலைப்பாடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.