யாழ்ப்பாணத்தில் DJ-NIGHT களியாட்ட நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவேண்டும்
யாழ்ப்பாணத்தில் DJ-NIGHT`என்ற பெயரில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்
” DJ-NIGHT என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று, யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி மீளவும் நடத்தப்பட்டதாக அறிகின்றோம்.
சமூகத்தை சீரழித்து DJ-NIGHT என்ற பெயரில் வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். அந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாது அனுமதியின்றி நடத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.
குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம் எனவும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.