பிரிந்த தாய், தந்தைக்காக மகன் எடுத்த விபரீத முடிவு; மனதை உருக்கும் சம்பவம்
தமிழகத்தில் பிரிதிருந்த தாய் தந்தை ஒன்று சேர வேண்டுமென்று 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருவதனால் அவர்களின் மகன் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், குறித்த மாணவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்கொலைக்கு முன்பு, மாணவர் கடிதமொன்றையும் எழுதி வைத்திருக்கிறார்.
அந்த கடிதத்தில் தனது இறப்பில் தாய் தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும் மேலும் தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், ‘நான் எங்கும் செல்லவில்லை.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்' என எழுதியிருந்திருக்கிறார். கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கையில் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இந்நிலையில் மகனின் விபரீத முடிவைக் கண்டு தாய் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

