பல்பொருள் அங்காடியில் பெண் சட்டத்தரணியின் முகம் சுழிக்கும் செயல் ; அதிரடி காட்டிய பொலிஸார்
கொழும்பு ரத்மலான பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து பொருட்களைத் திருடிய பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று இரவு (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் ஆட்டு இறைச்சி , வறுத்த முந்திரி, ஒரு பல் துலக்கும் தூரிகை மற்றும் ரூ. 5290 மதிப்புள்ள மதிய உணவுத் தாள் பொட்டலம் ஆகியவை அடங்கும். அவை அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

பிடிபட்ட சட்டத்தரணி
பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்கு வந்த ஒரு பெண், பல பொருட்களை ரகசியமாக தனது கைப்பையில் போடுவது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாகவும், அவர் இன்னும் சில நிமிடங்களில் கடையை விட்டு வெளியேறவிருப்பதாகவும் நேற்று இரவு (18) கல்கிஸ்ஸை தலைமையகத்திற்குக் கடையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அப்பெண் கடையை விட்டு வெளியேறியபோது ஒரு பெண் காவலரை அனுப்பி அவரது கைப்பையைச் சோதனையிட்டனர்.
துரத்தும் தமிழரின் பாவ கணக்குகள்; நடப்பதற்கு கூட திராணி அற்ற மஹிந்த; கைதுக்கு அஞ்சி ஓடி ஒழியும் கோட்டாபய !
அப்போது, கைப்பையில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த சட்டத்தரணி நேற்று முன்தினம் (17) இதே பல்பொருள் அங்காடியிலிருந்து இதே முறையில் மீன்களைத் திருடியதாகவும் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.