பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு!
பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக காணப்பட்டது.
22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
இதேவேளை நேற்றையதினம் (5) அரசாங்க ஆதரவாளரின் ஜபீர் இன்டநஷனல் ஹோட்டலிற்கு ஆர்ப்பாட்டக்காராகள் தீ மூட்டியதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தமமையால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஸின் வடமேற்கு நகரான ஜெசூரில் காணப்பட்ட இந்த ஹோட்டல் -ஆளும் அவாமி லீக்கின்பொதுசெயலாளருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.