பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை பற்றிய கலந்துரையாடல்;ஜீவன் தொண்டமான்
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமையின் அவசியம் பற்றி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.