கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிப்பு....மர்ம நோய்க்கு கிடைத்த விடை
உலகிலையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதல் தொற்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி மீன் சந்தையில் ஒரு கணக்காளருக்கு ஏற்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தகவலையடுத்து, பல நாட்களுக்குப் பிறகு, அரிசோனா பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியலின் தலைவர் மைக்கேல் வொரோபே இது தொடர்பான தமது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைத்தகவல்களை வெளியிட்டார்.
அதன் படி,
"கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று வுவுஹான் மார்க்கெட்டில் பணிபுரிந்த பெண் கடல் உணவு விற்பனையாளர் முதன் முதலில் அறியப்பட்ட தொற்றாளர்" என தெரியவந்துள்ளது.
அதனையடுத்து அந்த தொற்றானது பல்வேறு தொழிலார்களுக்கு பரவி அதற்கான அறிகுறிகளும் தென்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக ரக்கூன் நாய்கள் கூண்டில் அடைக்கப்பட்ட மேற்குப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இது தொற்றுநோயின் தோற்றத்திற்கு விலங்கு சந்தையின் நேரடி வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது.