புதிய வகை நெல் இனம் கண்டுபிடிப்பு
ஹெக்டயர் ஒன்றுக்கு 1,200 கிலோகிராம் அரிசி விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய வகை நெல் இனத்தை, உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, விவசாயிகள் மத்தியில் குறித்த நெல்லை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு அதிகம் நிலவுவதாக பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெல்லுக்கான உரிய விலையைப் பெற்றுத் தருமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இதுவரை உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் கடந்த அரசாங்கங்களைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் விவசாயிகள் விடயத்தில் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.