கொழும்பின் புறநகர் பகுதியில் 16 வயது சிறுவனால் ஏற்பட்ட விபரீதம்
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட கோர விபத்தினால் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் 16 வயதான சிறுவனால் செலுத்திய சொகுசு கார் 4 வாகனங்களை மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த வாகனங்கள் மீது மோதுண்டுள்ளது.
சிறுவன் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


