போதைப்பொருள் விற்ற அங்கவீனமுடைய பெண்; பொலிஸார் திகைப்பு
பதுளை - ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவத்தில் ஹாலிஎல, ஜெயகமபகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தி இருந்தனர்.
இதன்போது மறைத்து வைத்திருந்த 5,270 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் போதைபொருள் பாவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீட்டில் செய்யப்பட்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.