இன்று சனி மஹா பிரதோஷம்; சிவனை வழிபட வாழ்வில் துன்பங்கள் அகலும்
சனிக்கிழமையில் வரும் திரயோதசி மாலை 4:30 - 6:00 மணி 'சனி மஹா பிரதோஷம்' எனப்படும். இது சகல பாவங்களையும் போக்கும். அந்தவகையில் இன்று (27) சனி மஹா பிரதோஷம் வாள் ஆகும்.
ஏழரைச்சனி, அஷ்டம சனி தோஷங்கள், சனி திசை, புத்தி நடப்பவர்கள் இன்றைய தினம் விரதம் இருந்து, நந்தியையும் சிவனையும் வழிபட சனிபகவான் அருள் கிடைக்கும்.

“ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி பூஜை
இந்த நாளில் ஆலயம் செல்ல முடியாதவர்கள் “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி வீட்டிலேயே பூஜை அறையில் எம்பெருமானை வணங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்.
ஆலயத்திற்கு சென்று வழக்கம் போல வில்வ இலைகளை வாங்கி கொடுத்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நந்தி தேவரை வணங்குங்கள். பிறகு சிவபெருமானை வணங்குங்கள்.
சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். இவர் அபிஷேகத்திற்கு உங்களால் என்ன பொருட்கள் வாங்கி தர முடியுமோ, அதை வாங்கி கொடுக்கலாம் உங்கள் கஷ்டங்கள் தீரும். அதிலும் குறிப்பாக மூன்று அபிஷேக பொருட்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் உங்கள் கடன் சுமை குறையும். சொந்த நிலம் வாங்குவதில், சொந்த வீடு வாங்குவதில் பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனைகள் விலகும்.
வீடு சம்பந்தப்பட்ட, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக நார்த்தங்காய் அபிஷேகம் நந்தி தேவருக்கு செய்து வையுங்கள். வாடகை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகும்.
வெண்தாமரைப் பூவை வாங்கி கொடுத்து எம்பெருமானை வழிபாடு செய்தால், உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வெண்தாமரை கிடைப்பது அரிது என்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுக்கலாம். தவறு கிடையாது. கூடுமானவரை வென்றாமரைக்கு முயற்சி செய்யுங்கள்.
இன்றைக்கே பூ கடைக்காரரிடம் சொன்னால் நாளை மாலைக்குள் அந்த பூ உங்கள் கையை வந்து சேரும். இளநீர், அந்த சிவபெருமானை குளிர வைக்கக்கூடிய இந்த இளநீர் அபிஷேகம் மிக மிக சிறந்தது.
வீட்டில் இருப்பவர்களுடைய வேலைவாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும் தொழில் வளம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் வாங்கி தர வேண்டும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்கவில்லை, கை நிறைய சம்பாதிக்கவில்லை, அல்லது பிள்ளைகள் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள், அவர்களுக்கு சுறுசுறுப்பு வந்து நல்லபடியாக வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்றாலும் இந்த இளநீரை நீங்கள் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.