வெந்தயத்தில் இப்படி ஒரு சக்தியா
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் வெந்தயத்திற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு.
அதே வெந்தயத்தில் பல ஆன்மீக சக்திகளும் அடங்கி இருக்கின்றது.
அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு இந்த வெந்தயம் நமக்கு பெருந்துணையாக விளங்குகிறது.
ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வெந்தயத்தை உபயோகப்படுத்தி வீட்டில் நகை, பணம் சேருவதற்கான பரிகாரத்தை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளுவோம்.
குரு பகவானின் அருள் கிடைப்பதற்கு
இந்த பரிகாரம் செய்வதற்கு குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை அன்று நல்ல நேரத்தில் சிறிய பச்சை நிற துணியை விரித்து (அது பட்டு துணியாக இருந்தால் மிகவும் விஷேசமாக இருக்கும். இல்லா விட்டால் சாதாரண துணியையும் உபயோகப்படுத்தலாம்) அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்தயத்தை வைக்க வேண்டும்.
அத்துடன் இரண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இதில் தங்க நாணயம் ஒன்றை வைக்க வேண்டும்.
தங்க நாணயம் / வெள்ளி நாணயம்
தங்க நாணயம் வைக்க வசதி இல்லாதவர்கள் அதற்கு பதில் வெள்ளி நாணயத்தை வைக்கலாம்.
அதுவும் இல்லாதவர்கள் செம்பு நாணயத்தை வைக்கலாம். இவை மூன்றுமே இல்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை வைக்கலாம்.
500 ரூபாய் 1000 ரூபாய் என்று நம்மால் இயன்ற அளவு அதிகமான தொகையை வைக்க வேண்டும். இவ்வளவு தொகை வைக்க முடியாது என்று நினைப்பவர்கள் சில்லரை நாணயங்களையும் வைக்கலாம்.
நகையாக வைப்பவர்கள்
இந்த முடிச்சில் முடிந்த வரை விலையுயர்ந்த பொருட்களை வைக்க முயற்சி செய்யுங்கள். தங்க நாணயமாக இல்லாமல் நகையாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் அந்த நகையை சிறிது பசும்பாலில் சுத்தம் செய்த பிறகு வைக்க வேண்டும்.
பிறகு அதை ஒரு மூட்டையாக கட்டி பூஜை அறையிலோ, பீரோவிலோ, நகைகளை சேமித்து வைக்கும் பெட்டியிலோ வைக்க வேண்டும்.
தீப ஆராதனை காட்டுதல்
இந்த மூட்டையானது வடக்கு பார்த்த வாறு வைத்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். அதுமட்டும் இன்றி இதை எங்கு வைத்தாலும் தினமும் இதற்கு நாம் தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.
இந்த வெந்தயத்தை மாதம் ஒரு முறை மாற்ற வேண்டும். பழைய வெந்தயத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய வெந்தயத்தை வைக்க வேண்டும்.
பச்சை கற்பூரம் கரையாமல் இருந்தால் அந்த கற்பூரத்தையே மறுபடியும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பசும்பால்
அதில் வைத்திருக்கும் தங்கமோ, வெள்ளியோ, செம்போ அல்லது நாணயமோ அதை பசும்பாலில் கழுவி மறுபடியும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து நாம் செய்வதன் மூலம் குரு பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நமக்கு எவ்வளவு பெரிய கெட்ட காலமாக இருந்தாலும் மாற்றி நன்மையே நடத்தி வைப்பார்.
அது மட்டுமின்றி இந்த முடிச்சு இருக்கும் இடத்தில் பொன்னும் பொருளும் சேர்வதற்கான யோகத்தை குரு பகவான் தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வளவு எளிமையான இந்த வெந்தய பரிகாரத்தை நம்பிக்கையுடன் நாமும் நம் வீட்டில் செய்து பல நல்ல பலன்களை பெறுவோம் என்ற இந்த தகவலுடன் பதிவை நிறைவு செய்து கொள்வோம்.