கருப்பு நிற உணவுகளை தேர்தெடுக்கும் டயட் பிரியர்கள்; காரணம் என்ன?
சமீப நாட்களாக டயட் பிரியர்கள் பலர் கருப்பு நிற உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனெனில் அதில்தான் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தரும் ஆந்தோசயனின் பண்பு நிறைவாக உள்ளது.
அதோடு இவை ஆன்டி - ஆக்ஸிடன்டுகளையும் தருகின்றன. இதன் காரணமாக புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பை உண்டாக்கும் நோய்களிலிருந்து தீர்வு அளிக்கிறது. கருப்பு நிற உணவுகளில் உள்ள நன்மைகளாவன,
கருப்பு அரிசி :
கருப்பு அரிசி தெற்காசிய கண்டத்த்தில் விளையக்கூடிய பயிர் வகையாகும். இது சீனர்கள் பெரும்பாலும் சாப்பிடக்கூடிய அரிசியாக அறியப்படுகிறது. புற்றுநோய் செல்கள் வளரமால் தடுப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இதில் பிரெட், நூடுல்ஸ் போன்ற உணவுகளையும் செய்து சாப்பிடுகின்றனர்.
கருப்பு உலர் திராட்சை :
இதில் இரும்புச் சத்து, கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. பெண்களின் கருப்பை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஹெல்தியான உடலமைப்பிற்கு இது சிறந்தது.
கருப்பு உளுந்து :
நார்ச்சத்து, இரும்புச்சத்து , புரதச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கருப்பு உளுந்தில் கிடைக்கிறது. இதுவும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கருப்பு ஆலிவ்ஸ் :
கருப்பு ஆலிவ் மேல் நாட்டு உணவுகளில் அதிகம் காணப்படும். பாஸ்தா, பீட்சா போன்றவற்றில் அதிகமாக சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். இந்தியாவிலும் போதுதான் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. இதில் விட்டமின் ஈ நிறைவாக உள்ளதால் சருமத்தை பராமரிப்பதில் தொடங்கொ தோல் பிரச்னைகள், தலைமுடி பிரச்னைகளுக்கு உதவுகிறது.
கருப்பு எள் :
கருப்பு எள் ஸிங்க், காப்பர், கால்சியம், மெக்னீசியம், புரோட்டீன் , ஃபைபர், விட்டமின் கே, செலினியம் போன்ற அதிமுக்கிய ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. இதை ஒரு ஸ்பூன் வீதம் தினம் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டாலும் பல ஆரோக்கியங்களை பெறலாம்.
கருப்பு பூண்டு :
பூண்டில் கருப்பு வகையும் உள்ளதா என ஆச்சரியமாக உள்ளதா..? ஆம்.. வெள்ளைப் பூண்டு சுட்டு எடுத்தால் அது கருப்பாக மாறிவிடும். அவ்வாறு சுட்டு சாப்பிடும்போது அதன் நன்மைகள் பெருகுகின்றன. இதை சூப் அல்லது எந்த வகை உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு:-
மேலே குறிப்பிட்ட எந்த உணவையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள கூடாது. அவை மிதமான அளவிலேயே உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த கருப்பு உணவுகளை சாப்பிட விரும்பினால் உங்கள் ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.