யாழ் நல்லூரான் திருவிழா காலத்தில் இப்படியும் நடந்ததா! சமூக ஆர்வலர்கள் விசனம்
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தபெருமான் ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா பெரும்கோலாகலமாக இடம்பெற்றது. உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்தும் நல்லூர் கந்தனை காண பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் நல்லூரான் திருவிழா காலத்தில் One Shot Drink எனும் ஒரேதடவையில் முழுவதையும் அருந்தும் குளிர்பான கடைகள் முளைத்திருந்த நிலையில், அக்கடைகள் சுகாதார சீர்கேடுடன் இயங்கியதாக காணொளி வெளியாகியுள்ளது.
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைகள்
One Shot Drink வழங்கிய கடையில் எச்சில் கிளாஸ்களை ஒரே நீரில் கழுவியுள்ளமையும் அங்கு இடம்பெற்றுள்ளது.
நல்லூரான் மகோற்சப காலத்தில் யாழ் மாநகரசபையின் கீழ் குறித்த கடைகள் அங்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
One Shot Drink அருந்தும் சம்பவங்கள் இலங்கையர்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை யுவதிகள் , சிறுவர்கள் வாங்கி அருந்தும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய One Shot Drink வழங்கப்பட்ட கடைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதேசமயம் இவ்வாறான One Shot Drink சம்பவங்கள் நல்லூரான் திருவிழா காலத்தில் மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலும் பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.