நெல்லிக்காயை இதனுடன் மட்டும் சேர்த்து சாப்பிட கூடாது என உங்களுக்கு தெரியுமா?
நெல்லிக்காயுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனென்றால், இதனால் சில தீமைகளும் ஏற்படலாம். ஆனால், இது தெரியாமலேயே சிலர் ருசிக்காக நெல்லிக்காயுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆகையால், ஆரோக்கியமான முறையில் நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது
நெல்லிக்காயில் அமிலப்பண்பு இருக்கிறது. இதனால் அதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் புண், சீதபேதி போன்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பழத்துடன் கலப்பது சரியா?
பழங்களில் மாம்பழம், வாழைப்பழம் போன்றவை நெல்லிக்காயுடன் சேரும்போது செரிமானத்தை சிக்கலாக்க வாய்ப்பு உள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் C அதிகம். ஆனால் அதிகமாக எடுத்தால் அலர்ஜி, வாயில் புளிப்பு போன்ற உணர்வு தோன்றலாம்.
இரவில் சாப்பிட கூடாது
இரவு நேரத்தில் நெல்லிக்காயின் குளிர்ச்சியான தன்மை உடலை மந்தமாக்கும். அதனால் மதியம் அல்லது மாலை நேரமே நெல்லிக்காய் சாப்பிட சிறந்தது.
உப்பு சேர்த்து சாப்பிட கூடாது
நெல்லிக்காயின் சத்துகள் உப்புடன் சேரும் போது சற்று மோசமாக செயல்படலாம். அதனால் அதிக உப்புடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாது
நெல்லிக்காய் மற்றும் பால் ஆகிய இரண்டும் தனித்தனியாக சாப்பிட நல்லது. ஆனால் இதை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, வாயுத் தொந்தரவு ஏற்படலாம்