பிரித்தானியாவில் திடீரென ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள்!
கறுப்பு ஜுலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரித்தானியாவின் புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த எழுச்சி பேரணி பிரித்தானியாவில் நேற்று முன் தினம் (25-07-2023) Trafalgar சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரித்தானிய கொடி மற்றும் தமிழீழ தேசிய கோடி ஆகியன ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் சங்கங்கள் போன்ற அனைத்துதரப்பினரும்ஒன் றிணைந்து நடத்திய இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் தமிழர் மீதான படுகொலைகளை மாணவர்கள் கலை வடிவில் வெளிப்படுத்தினர்.