ஸ்பாக்கள் தொடர்பில் டயானா கமகே முன்வைத்த கோரிக்கை
ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம் என தெரிவித்த அவர், ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது எனவும் அவர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை மகிழ்ச்சி
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தான் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார் ஆனால் நான் தான் பிரசாரத்தை முன்னெடுத்தேன்.
கஞ்சா செய்கை யை மட்டும் அபிவிருத்தி செய்வதே பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.