டயானா கமகேவின் திருமணமும் பொய்யானது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி டயானா கமகே என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சேனக டி சில்வா, மற்றுமொருவரை சட்டப்பூர்வ திருமணம் செய்து கொண்டவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டபூர்வமான மனைவியல்ல
அவர் உக்ரேனிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் இருப்பதாக ஓஷால ஹேரத் கூறுகிறார்.
அந்த பெண் தற்போது இலங்கையில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும், இந்த இரண்டு பெண்களுடன் சேனக டி சில்வா வாழ்ந்து வருவதாகவும் ஓஷால ஹேரத் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.