சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம்

Diabetes Water Ghee
By Yadu Aug 21, 2023 10:45 AM GMT
Report

உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க சிறந்த நேரம் என்றால் அது காலை வேளை தான். நாம் உண்ணும் உணவுகளானது வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

குளுக்கோஸ் வெளியீடுவதைக் குறைக்கிறது மற்றும் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இப்படிப்பட்ட காலை உணவானது சத்தானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உடல் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதுவும் சர்க்கரை நோயாளிகளை எடுத்துக் கொண்டால், அவர்களின் காலை உணவு மட்டுமின்றி, எந்த ஒரு உணவை உட்கொள்வதாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவு காலை வேளையில் அதிகளவில் இருக்கும். இந்த சூழ்நிலையில் காலை வேளையில் உண்ணும் உணவானது இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

உட்கொள்ள வேண்டிய உணவு

இவர்கள் சரிவிகித காலை உணவை உண்ண வேண்டும். அதாவது புரோட்டீன், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்ள வேண்டும்.

முக்கியமாக காலை உணவில் மாவுச்சத்து என்னும் ஸ்டார்ச் இருக்கக்கூடாது. காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, ஹைப்பர் கிளைசீமியா இருக்க வாய்ப்புள்ளது.

காலையில் எழுந்ததும் அதிக தாகமாக இருந்தாலோ, அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ அல்லது பார்வை மங்கலாக தெரிந்தாலோ, இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள். பொதுவாக சர்க்கரை நோயின் போது ஹார்மோன்களை கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் இருக்காது.

இதனால் காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம். சிலருக்க காலை வேளையில் இரத்த சர்க்கரை அளவை மிகவும் குறைவாக இருக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் காலை உண்ணும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலையில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது அவசியம்.

இப்போது சர்க்கரை நோயாளிகள் காலையில் முதல் வேளையாக எந்த உணவுகள் அல்லது பானங்களை எடுக்கலாம் என்பது குறித்து காண்போம்.

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

நெய் மற்றும் மஞ்சள் தூள்

சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமானால் காலையில் எழுந்ததும் முதல் வேளையாக ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து உட்கொள்ளலாம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். 

இந்நிலையில் இதை உட்கொள்ளும் போது அதில் உள்ள நெட்ய வயிற்றை நிரப்பி, சர்க்கரை உணவின் மீதான நாட்டத்தை நாள் முழுவதும் கட்டுப்படுத்த உதவுகிறது.

அதேப் போல் இதில் உள்ள மஞ்சள் தூள் சர்க்கரை நோயாளிகளில் உடலில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்க உதவி புரிகிறது. 

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

ஆப்பிள் சீடர் வினிகர்

சர்க்கரை நோயாளிகள் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 30 மிலி நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 100 மிலி எலுமிச்சை சாற்றுடன் கலந்து, 100 மிலி நீரை கலந்து காலையில் முதல் வேளையாக குடிப்பது நல்லது.

இது உடலின் காரத்தன்மையை பராமரிக்க உதவி புரிந்து விரைவில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

பட்டை நீர்

ஏராளமான மருத்துவ குணம் கொண்ட மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரியக்கூடியது.

அதற்கு இந்த பட்டையை கொதிக்கும் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த பட்டை நீரைக் குடிக்க வேணடும்.

இப்படி குடித்து வந்தால் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

வெந்தய நீர்

கசப்புத்தன்மையைக் கொண்ட மற்றொரு மருத்துவ பண்புகளை அதிகம் உள்ளடக்கிய சமையலறை பொருள் தான் வெந்தயம்.

இந்த வெந்தயம் தினசரி கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகிறது.

அதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை மென்று நீரைக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமாம் | Diabetics Should Consume These Foods The Morning

புரோட்டீன் உணவுகள்

காலை வேளையில் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தால், புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதுவும் ஊற வைத்த பாதாம், வால்நட்ஸ் அல்லது நட்ஸ் வெண்ணெயுடன் கூடிய பழங்கள் போன்றவற்றை காலையில் உட்கொள்ள வேண்டும்.

முக்கியமாக காலையில் காபி, டீ குடிப்பதைத் அறவே தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக வேக வைத்த முட்டை, முளைக்கட்டிய பச்சை பயறுகளை சாப்பிடலாம். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US