வெல்லம் போட்ட டீ....சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததா?
மாறிவரும் வாழ்க்கை முறையாலும் தவறான உணவுப் பழக்கத்தாலும் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும் .
அவர்கள் எதை உட்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் . அந்தவகையில், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெல்லம் போட்டு டீ குடிக்கலாமா வேண்டாமா எனும் சந்தேகம் பலருக்கு உள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெல்லம் போட்ட தேநீர் பயனுள்ளதாக இருக்கும், எனினும் அதை உட்கொள்ளும் முன், நீங்கள் பல விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக சர்க்கரையை விட வெல்லம் அதிக நன்மை பயக்கும்.
வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது தவிர, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் காணப்படுகின்றன.
குளிர்காலத்தில் வெல்லத்தை உட்கொள்வது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது, இது உடலுக்கு கதகதப்பாக வைத்திருக்க உதவும்.
வெல்லம் தேநீர் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் கலந்த தேநீர் அருந்தலாம். இருப்பினும், இது அதிக தீங்கு விளைவிப்பதில்லை. வெல்லம் உடலுக்கு சூடு என்பதால், நீங்கள் அதை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையில் வெல்லம் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் அடைந்தாலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, குறைந்த அளவு வெல்லம் சேர்த்த தேநீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு :-
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரின் அறிவுரையின்றி எதையும் உட்கொள்ளக் கூடாது.
இது தவிர பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்சுலின் அளவு உடலில் நிலைத்திருக்கும் வகையில், குறுகிய இடைவெளியில் எதையாவது சாப்பிட முயற்சி செய்யுங்கள்.