முதல்நிலை வீரராகவே களமிறங்கும் வேண்டும் என்ற விருப்பம் தோனியிடம் இல்லை - ஜடேஜா
2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல்நிலை வீரராகவே களமிறங்க வேண்டும் என்ற விருப்பம் எம்.எஸ். தோனியிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் மாபெரும் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அணியின் வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய விதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.
அதன்கீழ் ஓர் "அன்கெப்ட்" வீரர் உள்ளடங்கலாக 10 பேரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதற்கமைய எம்.எஸ். தோனியையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அன்கெப்ட் வீரர் என்ற அடிப்படையில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தோனியின் செல்வாக்கு மற்றும் கடந்த காலச் சாதனைகளுடன், முதல்நிலை வீரராக அல்லாமல் அன்கெப்ட் வீரராக இருக்க விரும்புவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதுதொடர்பாக சென்னை அணி எவ்வித விபரங்களை வெளியிடாது இருக்கின்ற போதும், அதன் வீரர் ஜடேஜா தற்போது இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தோனியின் பெருமை உலகம் அறிந்த விடயமாக இருக்கின்ற நிலையில், அவர் அன்கெப்ட் வீரராக களமிறங்குவதற்கு எந்தத் தயக்கத்தையும் காட்ட மாட்டார் என்று ஜடேஜா கூறியுள்ளார்.