அவுஸ்திரேலிய பெண் விவகாரம்; முதன் முதலாக வாய் திறந்த தனுக்ஷ்க!
அவுஸ்திரேலிய பெண்ணால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட ஆதரவை வழங்கும் சட்ட நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை சிட்னியில் இருந்து செயல்படும் சான்ஸ் சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனுஷ்க குணதிலக்க நிரபராதி என அறிவித்துள்ளார் என சட்ட நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் ஆரம்ப கட்ட விசாரணையை கருத்தில் கொண்டு மேலதிக தகவல்களை வழங்க தமது நிறுவனம் தயாராக இல்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் உட்பட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.