பிக்பாஸ் நீதிமன்றத்தில் இருந்து இலங்கை பெண் ஜனனியை வெளியேற சொன்ன தனலட்சுமி!
தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டி உள்ள நிலையில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது.
பிக்பாஸ் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற டாஸ்க்கில் அமுதவாணன் மீது ராம் வழக்கு தொடர அந்த வழக்கிற்காக மைனா நந்தினி மற்றும் ADK வாதாடினர்.
மேலும் இந்த வழக்கில் நீதிபதியாக தனலட்சுமி சக போட்டியாளர்களால் நியமிக்கப்பட்டார்.
ராமிற்காக ADKயும் அமுதவாணனிற்காக மைனா நந்தினியும் வாதாடுகின்றார்.
இவ்வாறு வாதாடும் போது அமுதவாணன் தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக கூறும் போது சக போட்டியாளர்களான ஜனனி, மணிக்கண்டன், வி.ஜே கதிரவன், ஆசிம் என பலர் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கோவமடைந்த ADK நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள் எனக் கோவமாக கூற தனலட்சுமியும் ஜனனி உட்பட சிரித்தவர்களை வெளியே போங்க எனக் கூறியுள்ளார்.
பின்னர் நீதிபதியாக இருந்த தனலட்சுமி இறுதியாக மானிப்பு வழங்குகிறேன், இனி யாரும் சிரிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.