வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாதிற்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு அந்தப் பொறுப்புக்கு மேலதிகமாக, தம்மிக்க பிரசாதிற்கு அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

2026 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்க கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அணி தமது உலகக் கிண்ணப் பயிற்சிகளை இலங்கையிலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா அணி தமது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது பெப்ரவரி 7 ஆம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது