திருப்பதியானுக்கு 5.3 கிலோ எடையில் தங்கக்கைகள் காணிக்கை செய்த பக்தர்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
அதை, கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பக்தரிடம் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக் கொண்டார்.
அதேவேளை திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒருவர் விடாமல் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.
குபேரனிடம் தன் திருமணத்திற்காக வாங்கிய கடனை, கலியுகத்தில், மனிதர்கள் யார் யார் என்ன பாவம் செய்தார்களோ, அதற்கேற்ப பணத்தை வசூல் செய்து தன் கடனை அடைத்துவிடுவதாக திருமால் வாக்கு கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.