பாடசாலை ஒன்றில் இரவில் அரங்கேற்றப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பாடசாலையில் மேசைகள் மற்றும் கதிரைகள் இரவில் களவாடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த சில திஅங்களின் முன்னர் பாட்சாலையின் பிரதான மின் விளக்குகளை அணைத்த நிலையில், பாடசாலையின் பின்புற வாயில் வழியாக லொறி ஒன்று திருட்டு தனமாக நுழைந்தது.
லொறியை ஓட்டிச் சென்ற இரும்புக் கடை உரிமையாளர்
சிறிது நேரம் கழித்து, குறித்த லொறி விளக்குகளை அணைத்த நிலையில், மீண்டும் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே வந்தது. அப்போது அங்கிருந்த சிலர் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது லொறிக்குள் பாடசாலைக்கு சொந்தமான மேசை, நாற்காலிகள் இருப்பது தெரியவந்தது.
அதோடு லொறியை ஓட்டிச் சென்றவர், பாடசாலைக்கு அருகில் உள்ள பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டு, அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாடசாலையில் உள்ள உயர் அதிகாரிகளும் இந்த மோசடியுடன் தொடர்புப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.