சிறையில் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னகோன்; தனி அறையில் அடைப்பு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேஷபந்து தென்னகோன், முதல் நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் தனி அறையில் அடைப்பு
அதோடு சிறைக்குள் யாரிடமும் பேசாமல், சிறை அறையில் உட்கார்ந்து பார்த்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தேஷபந்து தென்னகோன் , தற்போது சிறையில் பலத்த பாதுகாப்புடன் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிறை அதிகாரிகள் அவரை தும்பர சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.