முடிவுக்கு வருகிறது தேசபந்து சகாப்தம்!
இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்கு போலீஸ் துறையின் மூத்த பிரதி போலீஸ் மா அதிபர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை போலீஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு போட்டி
தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக உள்ள பிரியந்த வீரசூரிய, லலித் பத்தினாயக்க, சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிதுவக்கு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜயலத், எம்.ஜி.ஆர்.எஸ். சமிந்த ஆகிய மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர்களும் இந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக உள்ளவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் சிறிது காலமே உள்ளது.