திடீர் பல்டி அடித்த பிரதி சபாநாயகர்!
இரு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதி சபாநாயகர் பதவியில் தான் நீடிக்கவுள்ளார் என்று ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்தேன்.
எனினும் நாடாளுமன்றில் ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவித்து இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் கோரிக்கையை பரிசீலித்து இந்த மாத இறுதி வரை பிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்க முடிவெடுத்ததாக கூறிய அவர், பிரதி சபாநாயகருக்கான வரப்பிரதாசங்களை அனுபவிக்க மாட்டேன் என்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.