உணவு வாங்க சென்ற பிரதி அதிபருக்கு இரவில் நேர்ந்த துயரம் ; ஒருவர் கைது
எம்பிலிபிட்டிய - கொழும்பு பிரதான வீதி, பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாத்தக்கடை பகுதியில், நேற்று (11) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரான 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
குறித்த நபர் தனது வீட்டிற்கு தேவையான இரவு உணவை வாங்கிக்கொண்டு, வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதன் பின்னர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (12) காலை உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.