பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக ஒரே இரவில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவம்!
வவுனியாவில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக உள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடர் திருட்டுச் சம்பவம் நேற்றிரவு (21-11-2023) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கண்டி வீதியில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையங்களின் கதவுகளை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை களவாடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சிசிரிவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழு கடைகளில் இடம்பெற்ற இந்த திருட்டில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.