மன அழுத்தமா? வாரம் ஒரு முறை இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்!
வாழ்வில் நம் தினசை வாழ்வில் மன அழுத்தத்தை தூண்டும் விஷயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனினும் அதிலிருந்து சற்று விலகி நமக்காக சில விஷயங்களை செய்தால்தான் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
கொரோனா , ஒர்க் ஃபிரம் ஹோம் , பரபரப்பான அலுவலக வேலை, இப்படி நம் மன அழுத்தத்தை தூண்டும் விஷயங்கள் நிறைய நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதிலிருந்து சற்று விலகி நமக்காக சில விஷயங்களை செய்தால்தான் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அவசியம். அந்த வகையில் உங்களை துரத்தும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வீட்டிலேயே இந்த விஷயங்களை செய்யுங்கள். மனம் சற்று லேசாகும். மறுநாள் மீண்டும் உற்சாகமாக ஓடத் தொடங்குவீர்கள்.
5 விஷயங்கள்
உடற்பயிற்சி : காலை எழுந்ததும் முதலில் உங்கள் உடலுக்கு சுருசுருப்பும் உற்சாகமும் அளிக்க உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள். இதனால் மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
சருமப் பராமரிப்பு : அடுத்ததாக உங்கள் டல் முகத்தை பொலிவாக்க சருமப் பராமரிப்பு அவசியம். எனவே இயற்கை முறையில் அல்லது கடைகளில் வாங்கிய ஃபேஸ் பேக் எதுவாக இருந்தாலும் அதை முகத்தில் அப்ளை செய்து ஓய்வாக ஒரு தனி அறையில் இருங்கள். அந்த சமயத்தில் பிடித்த பாடலையும் கேளுங்கள்.
குளியல் : அடுத்ததாக நல்ல நீண்ட நேரம் ஒரு குளியலை போடுங்கள். பல நேரங்களில் நம் மன அழுத்தத்தை கொட்டும் இடம் பாத்ரூமாகவும் இருக்கும். எனவே மகிழ்ச்சியான வகையில் ஒரு குளியலை போடுங்கள்.

உணவு : வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஹெல்தியாக இருங்கள். குறிப்பாக அன்றை நாள் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள நன்கு தண்ணீர் குடியுங்கள்.
பொழுதுபோக்கு : இறுதியாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். படம் பார்ப்பது, வரைவது, புத்தகம் வாசிப்பது இப்படி உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.
இப்படி வாரம் ஒரு முறை செய்தாலும் உங்கள் மன அழுத்ததை சமநிலையில் நிர்வகிக்க முடியும் என்பதுடன் அடுத்த 6 நாட்களும் நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.