வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை; நாளை காலைவரை அவதானம்!
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று(10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எச்சரிக்கை
இதற்கமைய, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் .
இதன்போது கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.