இலங்கை முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று
நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள்
இந்த மொத்த எண்ணிக்கையில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை அங்கு 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 72 மரணங்கள் பதிவாகியுள்ளன.