தமிழர் பகுதியில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிரடி காட்டிய பொலிஸார்
கந்தளாய், சீனிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கந்தளாய், அக்போபுர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திகம்பதான மற்றும் சீனிபுர பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 33 வயதுடைய நபர்களாவர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றைய நபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர்கள் இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது