ஜனாதிபதி மாளிகை படிகளுக்கு பல கோடி ரூபாய் செலவு வைத்த ஆர்ப்பாட்டகாரர்கள்!
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டகாரகளால் மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டே இவ்வாறு சேதமடைந்துள்ளதாகவும், அதனை புதிதாக சீரமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் போராட்டகாரர்கள் என்ற போர்வை திட்டமிட்ட சிலர் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் என்ற போர்வையில் அரசாங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.