எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை
எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருட்களின் விலையேற்றம் மக்களை மீண்டும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதும், பொருட்களின் விலையை உயர்த்துவதும் அரசின் சமீபத்திய கொள்கையாகும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தனது தலைமையில் தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.