இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புக்கு வந்த கிராக்கி; மக்கள் அதிர்ச்சி
இலங்கையில் சந்தையில் இதுவரை காலமும் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அடுப்புகளில் விலை பல மடங்காக அதிகரித்துள்ளன.
கொழும்பு புறக்கோட்டை உட்பட நாட்டின் பல நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
அதன்படி வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் ஒரு மண்ணெண்ணெய் அடுப்பை 6 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண்ணெண்ணெய்அடுப்புகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் சில வர்த்தகர்கள் தாம் எண்ணிய விலையில் மண்ணெண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்வது மிகவும் அநிதியானது மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அதிகவிலைக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்யும் வர்த்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.