உக்ரைன் தொடர்பில் நடிகர் சூர்யா முன்வைத்த கோரிக்கை; கூச்சலிட்ட ரசிகர்கள் சைலண்ட்
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, உக்ரைனில் நடக்கும் போரைப்பற்றி பேசி ஒரு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத் த நிலையில், அவர் கோரிக்கையை கேட்டவுடன் அதுவரை கூச்சலிட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் சைலண்டாகினர்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் திகதி இப்படம் திரைக்கு வர உள்ளது. வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா,
உக்ரைனிலிருந்து வரும் வீடியோவை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. அனைவரும் பாதுகாப்புடன் தாயகம் திரும்ப வேண்டும் என்று உக்ரைன் மக்களுக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வோம் என்றார். சூரியாவின் அந்த கோரிக்கையை கேட்ட ரசிகர்கள் உடனடியாக மௌனமாக பிரார்த்த்னை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் பேசிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் திரைப்படம் சிக்கலை சந்தித்த நேரத்தில் என்னுடைய ரசிகர்களும், ரசிகர் மன்ற தம்பிகளுக்கு நிறைய நெருக்கடி வந்தது. அதை என் தம்பிகள் பக்குவமாக கையாண்டதை பார்த்து தலைவணங்குகிறேன்.
நீங்கள் தான் எதற்கும் துணிந்தவர்கள். உங்களின் இந்த அன்பை கடவுளின் ஆசிர்வாதமாக பார்க்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார் சூர்யா.