கிரேட் வெஸ்டன் மரணம்; தாமதமாகும் பிரேதப் பரிசோதனை முடிவுகள்
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவினால் பிரேதப் பரிசோதணை நடத்தப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணர் சட்ட வைத்தியர் கூறியுள்ளார்.
உயிரிழந்த பெண் 40-45 வயதுடைய பெண் எனவும், இடது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததாகவும் பிரேத பரிசோதனையின் போது இணங்காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்குமாறுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.