தொலைபேசி உட்பட பல இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்ய வரையறை!
இலங்கையில் தொலைபேசி , தொலைக்காட்சி உட்படப் பல இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்ய வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதில் கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு பானங்கள் , பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர், வயின் ஆகியவை அடங்கும். மேலும் குறித்த புதிய விதிகள் சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளுக்கும் பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை மத்திய வங்கியின் இந்த அறிவிப்பினால் மேற்படி பொருட்களுக்கான இறக்குமதியில் தாக்கம் ஏற்படும் அதேசமயம் அந்தவகை பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.