திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய முக்கியஸ்தர்! உற்று நோக்கும் சீனா - அமெரிக்கா
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகின்றனர்.
இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திருகோணமலை விஜயம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருதாக கூறப்படும் பின்புலத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ அடுத்தமாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இதற்கான அனுமதியையும் இலங்கை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கப்பலின் இலங்கை வருகைக்கு வழங்கப்பட்ட அனுமதிக்க இந்தியா இராஜதந்திர மட்டத்தில் கடும் அழுத்தத்தை கொடுத்துவரும் பின்புலத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் தீர்மானமிக்கதாக அமையும் என்பதுடன், இருநாட்டு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.
உற்று நோக்கியுள்ள அமெரிக்கா - சீனா
குறிப்பாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் திருகோணமலை விஜயத்தை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இலங்கையில் உள்ள அந்நாட்டு இராஜதந்திரகளும் உன்னிப்பாக கவனித்து வருவது அறிய முடிகிறது.
இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் தமது திருகோணமலை விஜயத்தில், இங்கு இந்தியா முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கப்போகும் அபிவிருத்தித் திட்டங்கள், எண்ணைக் குதங்கள், திருகோணமலைக்கான விமானப் போக்குவரத்து உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியாவுக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது மலையக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடும் என்பதுடன் நுவரெலியாவில் இந்தியா சில முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.