முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு
முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய உதயநிதியை கைது செய்யும் நோக்குடன் பொலிஸார் உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதயநிதி கைது செய்து அழைத்து செல்வதாக கூறப்படுகின்றமை திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

உதயநிதி மீது வழக்கு பதிவு
அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.
அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.