அலரிமாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்; தமிழில் வாழ்த்துக்கூறிய பிரதமர் மகிந்த!
பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது. நாட்டில் கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, அலரி மாளிகையில் இன்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.
பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேறியது. இந்த நிகழ்வினை, பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும் அவரது பாரியார் அவர்களால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பட்சணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன்,நிகழ்வின் விசேட அம்சமாக , இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்கு, துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
அறியாமை இருள் அகற்றி
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) November 4, 2021
அன்பெனும் ஓளியேற்றி
அனைவரும் ஒன்றிணைவோம்
இத்தீபாவளித்திருநாளில்! #Deepavali #Festivemood #Diwali #தீபாவளி #HappyDiwali pic.twitter.com/VZ9cGhSU3C
இதனை பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ச நிகழ்வில் கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதேவேளை பிரதமர் தமிழில் வாழ்த்துக்கூறியுள்ள காணொளியும் வைரலாகி வருகின்றது.




