100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனடாவை புரட்டிப்போட்ட இயற்கையின் சீற்றம்... அப்புறப்படுத்தப்பட்ட 10,000 பொதுமக்கள்!
கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாவட்டத்தில் வான்கூவர் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. அந் நகரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் காரணத்தால் மிகவும் கடுமையான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவ லுள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாக்கியுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதோடு இயற்கை சீற்றத்தின் காரணமாக அங்குள்ள சுமார் 10,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நிலச்சரிவில் பாதிப்படைந்தவர்களை தேடும் முயற்சியில் மீட்புக் குழு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கனமழையால் இடுப்புவரை வெள்ளநீர் பாய்வதால் மீட்புக் குழுவினருக்கு பாதிக்கப்பட்டவர்களை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது.
நிலச்சரிவில் சிக்கியுள்ள கணக்கில் வராத மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. வாகன ஓட்டிகள் பலர் மண்சரிவில் புதைந்து இருக்கலாமென்று கூறப்படுகிறது.
Members of @RCAF_ARC 408 Tactical Helicopter Sqn are en route from Edmonton to assist with #BCfloods relief effort, conducting reconnaissance of impacted areas in interior BC. @MARPAC_FMARP @CFOperations @BCGovNews @CAFinUS @CanadianForces pic.twitter.com/25sNxPIMvs
— RCAF Operations (@RCAFOperations) November 18, 2021
மேலும் விசாரணை அதிகாரிகளிடம் இருவர் காணாமல் போயுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கிட்டத்தட்ட 300 பேர் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர்களை அனுப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.
புயல், மழை, வெள்ளத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ள அதேவேளை உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக மாகாண பிரதமர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

மெரிட் மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் அடையும் துயரத்தை நினைத்து மிகவும் கவலைப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

