கொரவலப்பிட்டி மின்நிலையம்: பங்காளிக்கட்சிகள் எடுத்துள்ள முடிவு!
அமெரிக்காவுக்கு கெரவலபிட்டி மின் நிலைய பங்குகளை வழங்கும் உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஒப்புக்கொள்ளாவிட்டால் மக்களிடம் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப் போவதில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தீர்மானம் முறையான தயார்படுத்தல்களுடன், அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டுக்கமையவே எடுக்கப்படும் என்று அமைச்சர் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனத்திற்கு கொரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 சதவீத பங்கை வழங்கும் ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குறித்த பங்காளி கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னர் ஜனாதிபதி நிராகரித்தார்.
இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் எதிர்ப்பதாகத் தெரிவித்து வரும் ஆளும் தரப்பு பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், நேற்றும் இந்த விடயம் தொடர்பாக கூடிக் கலந்துரையாடியிருந்தார்கள்.
இருப்பினும் இன்று (24) மாலை ஞாயிற்றுக்கிழமை பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை அரச தலைவர் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.