பொலிஸ் அதிகாரிகளாக நடித்து வேட்பாளர் வீட்டில் கொள்ளை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரிய, பொரலுகொட வீதியில் உள்ள பொரலுகொட பிரிவைச் சேர்ந்த, வேட்பாளரின் வீட்டிற்கு, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள், துப்பாக்கியைக் காட்டி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல்
வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள் 180,000 ரூபாய் பணம் இருந்த பணப்பையை திருடிச் சென்றதுடன், 85,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு மொபைல் போன்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
ஒப்பந்ததாரராக பணிபுரியும் நபர் தனது வீட்டிற்குள் இருந்தபோது, வீட்டின் முன் உள்ள கேட்டை யாரோ தட்டுவதைக் கேட்டு, கேட்டை திறந்துள்ளார்.
அப்போது, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அவ்விருவரும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி, இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.