3 கிழமையில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் மரணம்! சம்பவத்தால் அதிர்ச்சி
இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
இன்னிலையில் , இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.