யாழில் அடுத்தடுத்து அரங்கேறிய மரணங்களால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணைகள்

Jaffna Sri Lanka Police Investigation Death
By Vironika Aug 08, 2026 04:36 AM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

யாழில் அடுத்தடுத்து அரங்கேறிய மரணங்களால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணைகள் | Deaths Continue To Shock Jaffna

 விசாரணைகள் தீவிரம் 

குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.

வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நபர் ஒருவர் நேற்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அத்துடன் , யாழில் நேற்றுமுன்தினம் மன விரக்தியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர்.  விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.  யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US