சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; CID விசாரணையில் வெளிவந்த உண்மை

Sri Lanka Police Depression Sabaragamuwa University Crime Branch Criminal Investigation Department Death
By Sahana Jun 20, 2025 01:17 AM GMT
Report

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய Online விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்திய சீன தூதரகம்

இலங்கையில் புதிய Online விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்திய சீன தூதரகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்ற 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் உயிர்மாய்த்துக் கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; CID விசாரணையில் வெளிவந்த உண்மை | Death University Student Truth Cid Investigation

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பகிடிவதை முறைப்பாட்டு விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட பல தரப்பினரிடமிருந்து விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; CID விசாரணையில் வெளிவந்த உண்மை | Death University Student Truth Cid Investigation

அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் பகிடிவதை சம்பவங்கள் வௌியே செல்லாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகிடிவதை விசாரணை பிரிவுக்கு 30இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 10 இற்கும் மேற்பட்ட பெரும்பாலானவை சப்ரகமுவவில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரியந்துள்ளது.

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு!

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு!

கிழக்கு மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பகிடிவதை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதற்கிடையில், சமீபத்திய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1997 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது!

யாழில் போதைமாத்திரைகள் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் கைது!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US